கொள்ளையிட முற்பட்டபோது கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இரு வாரங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 31ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகட பகுதியில், முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர், ஒருவரை கொள்ளையிட முற்பட்டபோது கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
களுத்துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையைச் செய்த சந்தேகநபர் நேற்று (13) காலை கதிர்காமம் பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைதானவர் 24 வயதான பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (14) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment