பாராளுமன்ற துறைசார் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 6, 2023

பாராளுமன்ற துறைசார் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியனம்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கமைய மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற (திருமதி) கோகிலா குணவர்தன

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற மர்ஜான் பளீல்

தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜோன்ஸ்டன் பெனாண்டோ

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சட்டத்தரணி மதுர விதானகே

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பணியாற்ற (கலாநிதி) சரத் வீரசேக்கர

வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஏ.எல்.எம். அதாஉல்லா

உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சீ.பீ. ரத்நாயக்க

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜயந்த கெட்டகொட

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற காமினி லொக்குகே

சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற (திருமதி) முதிதா பிரிஸான்தி

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்ஸாரப்

ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற திஸ்ஸகுட்டி ஆரச்சி

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகமிலான் ஜயதிலக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

No comments:

Post a Comment