கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : சிங்கள ராவய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 6, 2023

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : சிங்கள ராவய அமைப்பு

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (6) காலை வந்த அக்மீமன தயாரட்ன தேரர் தலைமையிலான சிங்கள ராவய அமைப்பினர் சபாநாயகரை சந்திக்க முயன்றபோதும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சபாநாயகருக்கு பதிலாக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன கடிதத்தை பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து இந்த கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை, அதிகாரத்தை பயன்படுத்தி குழப்பங்களை விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

ஆகவே அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அக்கடிதத்தில் சிங்கள ராவய அமைப்பினர் வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

No comments:

Post a Comment