2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் இதுவரை வீடுகளுக்கு வருகை தரவில்லையாயின் அவரை தொடர்பு கொள்ளுங்கள். வாக்காளர் கணக்கெடுப்பு தற்போது மேற்கொள்ளப்படுகிறது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பிரதான தேருநர் இடாப்பு - 2023
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயதை பூர்த்தி செய்தல் அதாவது 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள் 2023 ஆம் ஆண்டு பிரதான தேருநர் இடாப்பில் உள்ளடக்கப்படும் தகைமைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேருநர் (வாக்காளர்களை) கணக்கெடுப்பதற்கான பி.சி படிவம் சகல வீடுகளுக்கும் வழங்கப்படுவதில்லை.
தற்போது செல்லுபடியாகும் இடாப்பில் ஒவ்வொரு வீடுகளின் கீழ் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்ப் பட்டியலை கிராம அலுவர் வீடுகளுக்கு கொண்டு வருவதுடன் அதன் பிழையற்ற தன்மையை உறுதி செய்து குடும்பத் தலைவர் ஒருவர் அந்தப் பெயர்ப் பட்டியலில் கையொப்பமிடுதல் வேண்டும்.
அந்தப் பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்ந்து அந்த முகவரியில் வசிப்பவர்களாயின் வேறு எந்தவொரு படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.
18 வயது பூர்த்தியடைதலின் அடிப்படையில் வதிவிடம் மாற்றமடைதலின் அடிப்படையில் பிரதான இடாப்பில் உள்ளடக்கப்படுவதற்கு கிராம அலுவலரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று பூரணப்படுத்த வேண்டும்.
குறைநிரப்பு தேருநர் (வாக்காளர்) இடாப்பு
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் அதாவது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் 2023(1), 2024(2) மற்றும் 2023(3) என்ற அடிப்படையில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தயாரிக்கப்படும் குறை நிரப்பு தேருநர் இடாப்புக்களில் உள்ளடக்கப்படுவதற்கான தகைமையை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
2025 ஆம் ஆண்டில் குறைநிரப்பு இடாப்புக்களில் உள்ளடக்கப்படுவதற்கான தகைமைகளைப் பெற்றுக் கொள்ளும் நபர்கள், அதாவது 2007.01.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏனைய விடயங்கள்
தேருநர்களை (வாக்காளர்களை) கணக்கெடுத்தல் தொடர்பான மேலதிக விபரங்கள் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் தேருநர்கள் பதிவு தொடர்பான விபரங்களை கிராம அலுவலர்களிடமிருந்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் அல்லது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கிய பத்திரங்களை கிராம சேவகர் அலுவலர் வழங்குவார்.
No comments:
Post a Comment