மன்னார், கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, உண்டியல், நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத விஷமிகளால் வெள்ளிக்கிழமை (9) இரவு இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், நேற்று (10) சனிக்கிழமை வவுனியா தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இத்திருட்டுச் செயல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment