கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்து நாட்டுக்கு வெளிநாட்டு அந்நிய செலாவணியாக 479.7 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 175 மில்லியன் அமெரிக்கன் டொலரால் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து அந்நிய செலாவணியாக 2,346.9 மில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அதற்கிணங்க கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டுக்கு கிடைத்துள்ள 1,335.6 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 75.7 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment