டிக்டொக்கில் மதுபான தானம் வழங்கும் காட்சி : கட்டுநாயக்காவில் 6 இளைஞர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

டிக்டொக்கில் மதுபான தானம் வழங்கும் காட்சி : கட்டுநாயக்காவில் 6 இளைஞர்கள் கைது

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தானசாலை காட்சியை 'டிக்டொக்' சமூக ஊடக தளத்தில் பதிவேற்றம் செய்த 6 இளைஞர்களை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகத்தினூடாக மதுவை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வந்தமையால், பொலிஸ்மா அதிபர் இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தார். 

இதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, இவர்களிடமிருந்து காணொளி தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணைகளின்போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபானப் போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும் டிக்டொக்கில் வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்தச் செயலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், 6 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment