ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த 520 பேருக்கு நியமனம் வழங்கிய கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த 520 பேருக்கு நியமனம் வழங்கிய கிழக்கு மாகாண ஆளுநர்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, விமல வீர திஸாநாயக்க, பிரதான செயலாளர் M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment