போலியாக நடத்தப்பட்டு வந்த திருட்டுக் கச்சேரியை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன்போது, முன்னாள் நகர சபை எழுதுவினைஞர் ஒருவரை கைது செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கிணங்க பாணந்துறை பரன்ன வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாணந்துறை நகர சபை மற்றும் மொரட்டுவ மாநகர சபை ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளதாக தெரிய வருகிறது.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்படி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சஞ்ஜீவ லக்மாலின் தலைமையில் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பத்து தினங்கள், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து நேற்று அதிகாலையே சுற்றிவளைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 31 உத்தியோகபூர்வ முத்திரைகள் (சீல்) கைப்பற்றப்பட்டன.
களுத்துறை மாவட்ட பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர் காணி பதிவாளர்கள், வருமான வரி பரிசோதகர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment