இலங்கையில் 13 வருடங்களாக வாழ்ந்த ஸ்கொட்லாந்து பிரஜை தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

இலங்கையில் 13 வருடங்களாக வாழ்ந்த ஸ்கொட்லாந்து பிரஜை தற்கொலை

தலங்கம, கொஸ்வத்த பகுதியில் தனியாக வசித்து வந்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தலங்கம, கொஸ்வத்த பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் நிதி நெருக்கடி தொடர்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம கொஸ்வத்தை, பைப் வீதி, விஜயமான்ன தோட்டத்தில் வசிக்கும் இயன் பிரணன் (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்து அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் சிரேஷ்ட முகாமையாளராக பணிபுரிந்து வந்ததாகவும் 2019 ஆம் ஆண்டு மனைவி உயிரிழந்ததையடுத்து வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் பணியாளர் இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்றையதினம் (15) காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது ​​தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் திருமதி பிரேமலதா அபேவர்தனவுக்கு அறிவித்து அவரது ஆலோசனையின் பேரில் மரண விசாரணையை நீதவானிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நுகேகொட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கடுவெல நீதவான், சம்பவ இடத்திலேயே விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரால் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இறந்தவர் தனக்கு ஸ்கொட்லாந்தில் சொத்து இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளிநாட்டு கரன்சி கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment