பேராதனை பல்கலைக்கழகத்தின் 11 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை - News View

About Us

About Us

Breaking

Monday, June 12, 2023

பேராதனை பல்கலைக்கழகத்தின் 11 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று பழுதடைந்த சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத்தடை நேற்றுமுன்தினம் (10) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment