பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டது ஜனக்க ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டது ஜனக்க ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

அது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க 2022ஆம் ஆண்டு 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7(அ) (ரோமன் இலக்கம் 3, 5)இன் பிரகாரம், குறித்த தலைவர் பதவியில் மற்றும் உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதற்கு பொருத்தமற்றவர் என நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் 2023 ஏப்ரல் 18ஆம் திகதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், ஜனக்க ரத்நாயக்கவை அதன் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை அனுமதிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற புதிய ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment