சீனி, கோதுமை மா விலை அதிகரிக்கப்படமாட்டாது - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

சீனி, கோதுமை மா விலை அதிகரிக்கப்படமாட்டாது

சீனி, கோதுமை மா விலை அதிகரிக்கப்படமாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின்போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக் கொண்டதற்கமைய, அடுத்த ஒரு மாதத்திற்கு சீனி விலை அதிகரிப்பு தொடர்பான சிக்கல் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையையும் 195 ரூபாவை விட அதிகரிக்காதிருக்கவும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. 

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளமைக்கு அமைய, வரி அதிகரிக்கப்பட்டாலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உப குழுவின் ஊடாக முட்டை இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment