இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளவர்களிடமிருந்து நாட்டுக்கு 180 கோடிக்கும் அதிகமான டொலர் நிதி வெளிநாட்டு அந்நியச் செலாவணியாக கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த நான்கு மாதங்களில் அவர்கள் மூலம் 1867.2 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 454 மில்லியன் டொலர் அவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகையானது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 82.4 வீத அதிகமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மூலம் இலங்கைக்கு 427.5 மில்லியன் டொலர் அனுப்பப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் 407.4 மில்லியன் டொலர்களும் மார்ச் மாதத்தில் 568.3 மில்லியன் டொலர்களும் இவ்வாறு நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமாக நாட்டுக்கு இவ்வாறு பணத்தை அனுப்பும் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபடுவோருக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் மற்றும் விமான நிலையத்தில் தீர்வை வரி நிவாரணம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment