கண்புரை சத்திர கிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருந்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறிப்பிட்ட மருந்தினை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை கோரியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு இந்திய நிறுவனத்திற்கு இழப்பீடு தொடர்பான கோரிக்கையை அனுப்பியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிற்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை குறிப்பிட்ட மருந்தினை விநியோகம் செய்த நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலைமை குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர், மருந்துகளின் தரங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு சர்வதேச அளவில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அவர்கள் கடந்த ஏழு வருடங்களாக மருந்துகளை விற்பனை செய்துவருகின்றனர். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் கீழ் அந்த நிறுவனம் பதியப்பட்டுள்ளது எனவும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment