(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீமின் கையடக்கத் தொலைபேசி பாகங்கள் வெளிநாடுகளின் புலனாய்வு பிரிவுக்கும், பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்பு சபையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றபோது, 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான சஹரான் ஹாசீமின் கையடக்கத் தொலைபேசி பாகங்கள் அமெரிக்க புலனாய்வு பிரிவினருக்கும், பிரித்தானிய பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா அல்லது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இதற்கான ஆலோசனை வழங்கியது யார்? அரசாங்கமா ? ' என கேட்கப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும் இவை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
No comments:
Post a Comment