ஜனாதிபதியை நியமித்ததும் நாங்கள்தான். ஜனாதிபதிக்கான பெரும்பான்மையை உருவாக்கியவர்களும் நாங்கள்தான். நாம் நியமித்த ஜனாதிபதி இருக்கும்போது, எதிர்க்கட்சியில் ஏன், அமர வேண்டுமென, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நீங்கள் எதிர்க்கட்சியில் அமரப்போவது உண்மையா? என ஊடகவியலாளர் ஒருவர் ஜோன்ஸ்டன் பெர்னாண் டோவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கப்போவதாகக் கூறப்படுவது உண்மையா? என அவரிடம் கேட்டபோது, தான், பிரதமராக வேண்டுமென எங்காவது மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருக்கிறாரா? இதெல்லாம் உருவாக்கப்பட்ட செய்திகள். இப்போது ஒரு பிரதமர் இருக்கிறார்தானே எனப் பதிலளித்தார்.
அமைச்சுப் பதவிகள் இல்லாததால், எதிர்க்கட்சிக்கு செல்கிறீர்களா? என கேட்டபோது, நாம் நியமித்த ஜனாதிபதி சிறப்பாக நாட்டை நிர்வகித்து செல்கிறார்தானே.
எங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டுமென்பதே எமது விருப்பம்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வேண்டியளவு ஆட்களை இணைத்துக் கொண்டு அரசை பலப்படுத்திக் கொள்ளுமாறே நாங்கள் கூறுவதாகவும் ஜோன்ஸ்டன் பர்னாண்டோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment