மிருகக்காட்சிச்சாலை கட்டணங்களில் திருத்தம் : வர்த்தமானி வெளியானது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 17, 2023

மிருகக்காட்சிச்சாலை கட்டணங்களில் திருத்தம் : வர்த்தமானி வெளியானது

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உயிரியல் பூங்காக்களிலுமுள்ள மாமிச உண்ணி விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்கான கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகோண்டாக்களுடன் படம் எடுப்பதற்கான கட்டணம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்பட்ட பஸ்களின் கட்டணம் 150 ரூபாவாகவும், ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்படாத பஸ்களின் கட்டணம் 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment