கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரிப்பு

வட மேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை கால்நடை மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட, புண் நீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

சவாரி மாடுகள் இரண்டை வளர்த்து வந்த ஒருவர், அதில் ஒன்று பெரியம்மை நோய் தாக்கம் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் ஏனைய கால்நடை ஒன்றும் கடுமையாக பெரியம்மை நோய்த்தாக்கம் காரணமாக உணவு இன்றி நீர் கூட அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நாளாந்தம் பெறப்படுகின்ற பாலின் அளவும் குறைந்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பலர் இதனால் பாதிக்கப்படுவதாகவும் தற்பொழுது கால்நடைகளுக்கான மருந்து வகைகளும் பல மடங்கு அதிகரித்துகானப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கால்நடைகளை கொள்வனவு செய்து வளர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment