இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுக்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுக்கு அனுமதி

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், 350 மில்லியன் டொலர் விசேட கொள்கை அடிப்படையிலான கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் (EFF) தொடர்புடைய, நிதி உதவியின் ஒரு பகுதியாகும். 

இது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa), இலங்கை கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் கவலை கொள்வதாகவும், அதிக பணவீக்கமானது கடன் பெறும் சக்தியை குறைத்து விட்டதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடந்த கால வளர்ச்சி ஆதாயங்கள் தலைகீழாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி கவலை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment