கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் நேற்று (28) இரவு அநுராதபுரம், ஸ்ராவஸ்தி பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று (29) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த தேரரை, எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து கைது செய்யப்படட்ட, மேடை நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரியவுக்கும் ஜூன் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment