முஷாரப் எம்பியின் தொடர் முயற்சியினால் தசாப்தமாக தேங்கி கிடந்த சம்புநகர் வீட்டுத் திட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

முஷாரப் எம்பியின் தொடர் முயற்சியினால் தசாப்தமாக தேங்கி கிடந்த சம்புநகர் வீட்டுத் திட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது

2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான வீடுகள் அட்டாளைச்சேனை சம்புநகரிலே 2008ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இருந்தபோதும் அவர்களுக்கான உரிமைப்பத்திர ஆவணங்கள் தசாப்தம் தாண்டியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இது குறித்து பல அரசியல் தலைவர்களிடத்தில் கடந்த காலங்களில் எத்தி வைத்தும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சம்புநகருக்கு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழுத் தலைவர் சட்டத்தரணி முஷாரப் விஜயம் செய்தபோது குறித்த உரிமைப்பத்திரங்களை பெற்றுத்தருமாறு அந்த வீட்டுத்திட்ட மக்கள் வினயமாக கேட்டுக் கொண்டனர்.

இதனையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தொடர்ச்சியான முயற்சிகளை செய்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட காணி ஆணையாளர், வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தி தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டமையையிட்டு நேற்று (15.05.2023) குறித்த பயனாளிகளுக்கான ஆவணங்களை வழங்க முடியுமாயிருந்தது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த பயனாளிகளுக்கான உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்வில், அடரடாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் சாபீர், உதவி செயலாளர் திருமதி நஹீஜா முஸாபீர், சமுர்த்தி பிரிவு தலைமை பொறுப்பாளர் ஜனாப் ஹமீத், சமூக சேவை உத்தியோகத்தர்அர்ஷாத், அட்டாளைச்சேனை பிரதேச பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் அரூஸ், கியாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் அஸ்ஹர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மக்களின் தலையாய உரி்மையான காணி உரிமையினை பெற்றுக் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் ‘தீர்வே விடிவு’ பயணத்தில் பல தீர்வுகளை கண்டடைந்து, அண்மையில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தினை தீர்த்த கையோடு தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரச்சினையையும் தீர்த்து வைத்ததை இட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியை பெரிதும் சிலாகித்ததோடு, பயனாளிகளும் நெஞ்சு நெகிழ்ந்து நன்றிகளை பகர்ந்தனர்.

No comments:

Post a Comment