கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று நிலம் தாழிறங்கியது. கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் கடல் வழிப் பாதையில், இந்நிலத் தாழிறக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சிறு அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நில அதிர்வுகள் தொடர்பான புதிய பரிசோதனை உபகரணங்களை பொருத்தி, கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெறும் பூமி அதிர்வுகள் தொடர்பில் துரித கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படும்போது கொழும்பை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ள அவர், பயப்பட வேண்டிய நிலை காணப்படவில்லை என்றும், எனினும் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment