இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்தல் : உரிய சுற்றுநிருபத்தை பின்பற்றவும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்தல் : உரிய சுற்றுநிருபத்தை பின்பற்றவும்

தேசிய பாடசாலைகளில் இடைப்பட்ட வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது உரிய சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு கல்வி அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தேசிய பாடசாலைகளின் இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதற்கிணங்க தேசிய பாடசாலைகளின் 2ஆம் வகுப்பிலிருந்து 4ஆம் வகுப்பு வரை மற்றும் 7ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரையான இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போதே இச்சுற்று நிருபத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்சுற்றுநிருபத்துக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள கல்வியமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment