கொவிட் சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக நிபுணர் குழு பிழையான வழி நடத்தல் : ஒப்புக் கொண்டார் சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

கொவிட் சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக நிபுணர் குழு பிழையான வழி நடத்தல் : ஒப்புக் கொண்டார் சுகாதார அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீ்ம், இராஜதுரை ஹஷான்)

கொவிட்19 சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தவறாக ஒப்புக் கொண்டுள்ளார்.

கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தபோது அரசாங்கம் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டதாகவும், ஆனால் இந்த அறிவுரை தவறானது என்பது தற்போது தெளிவாகிவிட்டது என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.

கொவிட்19 ஜனாதிபதி செயலணி நிபுணர் குழு பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதுடன் அதன் நிபுணர்குழுவின் ஒரு சில பேராசிரியர்கள் தங்களின் அறிவை பயன்படுத்தி மக்களை பிழையாக வழிநடத்தி இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ரவூப் ஹக்கீம் தனது கேள்வியில், 2019, 2022 காலப்பகுதியில் கொவிட்19 காரணமாக இறந்து ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட உடல்களின் மொத்த எண்ணிக்கை, இறந்தவர்களின் பால், இனம் மற்றும் அரசாங்கம் ஓட்டமாவடியை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 2022 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 5ஆம் திகதி வரை ஓட்டமாவடியில் கொவிட் தொற்றில் இறந்தவர்கள் மொத்தமாக 3 ஆயிரத்தி 634 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2225 ஆண்களும், 1409 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 2992 இஸ்லாமியர்கள், 237 பெளத்தர்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கத்தோலிக்கர்கள் அடங்குகின்றனர்.

அத்துடன் கொவிட்19 தொற்றில் இறந்தவர்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கு கொவிட்19 ஜனாதிபதி செயலாணி மற்றும் நிபுணர்குழுவின் தீர்மானத்துக்கமையவே மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அந்த காலப்பகுதியில் நான் சுகாதார அமைச்சராக இருக்கவில்லை. இருந்தபோதும் கொவிட் நிபுணர்கள் குழு பேராசிரியர்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்தி மக்களை பிழையாக வழி நடத்தி இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இவர்களின் தீர்மானத்துடன் நான் இனங்கவில்லை. ஆனால் அதிகமான பேராசிரியர்கள் உலக சுகாதார அமைப்பின் கருத்துடனே இருந்தார்கள்.

குறிப்பாக நெத்தகா விதான என்ற பேராசிரியர், அவர்தான் கடந்த காலத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகாெண்டு முன்னணியில் இருந்தார்.

அதனால் இந்த விடயத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இது வித்தியாசமான முறையிலேயே இடம்பெற்று வருகிறது. அதனால் என்ன நடந்தது என நான் குறிப்பிடாவிட்டால் நான் எனது கடமையில் இருந்து விலகி இருப்பதாக ஆகிவிடும்.

அத்துடன் கொலிட் நிபுணர் குழு மிகவும் பிழையான முறையில் வழி நடத்தி இருந்ததை நானும் ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் அதன் பங்காளியாக நான் இருக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment