கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த ஐந்தாண்டு பதவிக் கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பேராசிரியர் சுனில் ஆரியரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்த, சிரேஷ்ட சிங்கள பாடகரும் இசையமைப்பாளருமான பேராசிரியர் சனத் நந்தசிறி (81) கடந்த மார்ச் 28ஆம் திகதி காலமானார். அவரது இடத்திற்கே பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் சுனில் ஆரியரத்ன ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றிய ஒருவராவார்.
No comments:
Post a Comment