புதிய ஒம்புட்ஸ்மனாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

புதிய ஒம்புட்ஸ்மனாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே. ஹிரிம்புரேகம இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நியமனம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

மார்ச் 31 முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) பதவிக்கு ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே. ஹிரிம்புரேகமவை நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

சபாநாயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவரதன தலைமையில் கடந்த மார்ச் 24ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவை கூடியபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment