இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தை தனிப் பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம் : சபாநாயகருக்கு அறிவித்தது உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தை தனிப் பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம் : சபாநாயகருக்கு அறிவித்தது உயர் நீதிமன்றம்

புதிய மத்திய வங்கி சட்டமூலம் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு வழங்கியுள்ள வியாக்கியானத்தை இன்று (04) பாராளுமன்றத்திற்கு அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

புதிய மத்திய வங்கி சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பிற்கு முரண்படாத காரணத்தினால் அதனை சாதாரண பெரும்பான்மையுடன் அவையில் நிறைவேற்றலாம் என இதன்போது அவர் அறிவித்தார்.

உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment