சட்டவிரோத கசிப்பு வியாபாரம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியவர்கள் என தெரிவித்து குழு ஒன்று வீடு ஒன்றில் உட்புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக இருவரை புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெரும்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரிய வருவதாவது, குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 24 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரு ஓட்டோக்களில் 8 பேர் கொண்ட குழுவினர் உட்புகுந்து கசிப்பு விற்பனை தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியது நீங்கள் என தெரிவித்து அங்கிருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்கதல் நடாத்தி விட்டு அங்கிருந்த கனணி உட்பட பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிசார் தொடர் விசாரணையில் தலைமறைவாகியிருந்த இடத்தை புதன்கிழமை (26) முற்றையிட்டபோது இந்த தாக்குதலில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்தவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment