எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அட்டை QR முறையை இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அட்டை முறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆயினும் எரிபொருள் ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் அட்டை (NFP) தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுமென தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் சில மாதங்களில் நிதி அமைச்சு உள்ளிட்ட ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment