துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளது.
உலகின் வெவ்வேறு அடுத்தடுத்து விடாமல் நில நடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமைதான் அங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தின் சுவடுகள் காயும் முன் அங்கே மீண்டும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 97 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன் தஜிகிஸ்தானில் முர்கோப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதுடன், தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கம் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவு ஆனது. தஜிகிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5.0 ரிக்டரில் நில நடுக்கம் பதிவு ஆனது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நியூசிலாந்தில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.1 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
அதேபோல் நேற்று பிலிப்பைன்சில் அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அதற்கு முதல்நாள் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
நேற்று கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் நேற்றுமுன்தினம் 4.8 அளவில் இன்னொரு நில நடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் நேற்றுமுன்தினம் 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி நில நடுக்கத்தைத் தொடர்ந்து இப்படி அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
துருக்கி நில நடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. துருக்கி அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி ஆகும். அங்கு இன்னும் மீட்புப் பணிகள் முடியவில்லை. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக,
சர்வதேச அளவில் அடுத்தடுத்து ஏற்படும் நில நடுக்கங்களுக்கு சர்வதேச வல்லுநர்கள் எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை.
சிரியா - துருக்கி நில நடுக்கத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் நில நடுக்கங்கள் ஏற்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூமி அடுக்குகளின் திடீர் நகர்தல்தான் நில நடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நில நடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்துள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக தற்போது உலக அளவிலும் பல்வேறு நில அடுக்குகள் நகர்கின்றதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment