அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்புப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் இன்று (01) பல்கலைகழக நுழைவாயிலில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப்போராட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள பாரிய வரி விதிப்புக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது “அநீதியான வரி விதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி” போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசுக்கும் மக்களுக்கும் தங்களது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment