லாஃப்ஸ் சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 6, 2023

லாஃப்ஸ் சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு

றிஸ்வான் சேகு முஹைதீன் 

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5kg : ரூ. 5,080 இலிருந்து ரூ. 5,280 ஆக ரூ. 200 இனால் அதிகரிப்பு
5kg : ரூ. 2,032 இலிருந்து ரூ. 2,112 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
2.3kg : ரூ. 813 இலிருந்து ரூ. 845 ஆக ரூ. 32 இனால் அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg : ரூ. 5,300 இலிருந்து ரூ. 5,080 ஆக ரூ. 220 இனால் குறைப்பு
5kg : ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,032 ஆக ரூ. 88 இனால் குறைப்பு

கடந்த ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg : ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
5kg : ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg : ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
5kg : ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு

இதேவேளை, கடந்த இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

12.5kg : ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
5kg : ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
2.3kg : ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு
 
இதேவேளை இன்று (06) முதல் அமுலாகும் வகையில் Litro கேஸ் நிறுவனம் விலைகளை அதிகரித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்

No comments:

Post a Comment