வெளியான போலி கடிதம் - விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

வெளியான போலி கடிதம் - விசாரணைகள் ஆரம்பம்

சீனத் தூதரக கடிதத் தலைப்பில் போலிக் கடிதம் வெளியாகியுள்ளமை தொடர்பில் சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் தொகைகளுக்கு தவணை வழங்க முடியாதென அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சீனத் தூதரக அதிகாரியொருவர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவு என தெரிவித்து சீன தூதரகத்தின் கடிதத் தலைப்பினை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் குறித்தே சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிஐடியினர் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த போலி ஆவணம் குறித்து தனக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்பினார்கள் நான் இது குறித்த விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்சிம் வங்கியின் கடிதம் என தெரிவித்து கடிதமொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் கடந்த (18) இடப்பட்டு இந்த போலிக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நிலுவைக் கடன்களுக்கு தவணை வழங்கப்பட முடியாதெனவும், கொவிட்19 காரணமாக தமது நாடும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இந்தத் தகவல்கள் பொய்யானவையெனவும் அதிகாரபூர்வமான தகவல்களை மட்டும் கருத்திற் கொள்ளுமாறும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment