(எம்.வை.எம்.சியாம்)
75 வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், குறிப்பாக இந்த காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக முதல் இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் ஒத்திகையின் காலையிலும் நிகழ்வின் 4 ஆம் திகதியிலும், இவ்வீதிகளைப் பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் சுதந்திரமாக பயணிக்கலாம். கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வீதிகளை பயன்படுத்தும்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment