மக்களுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக் கொடுக்கத் தயார் - பசில் ராஜபக்ச - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

மக்களுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக் கொடுக்கத் தயார் - பசில் ராஜபக்ச

இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளுக்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்கத் தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக் கொடுக்கத் தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நான் வெற்றி பெற வேண்டுமா அல்லது தோல்வியடைய வேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்து வைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனி நபர் என நாங்கள் நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment