தங்கத்தின் விலையில் வரலாறு காணா உயர்வு - News View

About Us

About Us

Breaking

Monday, January 2, 2023

தங்கத்தின் விலையில் வரலாறு காணா உயர்வு

உலக சந்தையில் நாளுக்குநாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. 

இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று தற்போது நாட்டில் 187,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,700 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாகவும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

No comments:

Post a Comment