மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் கண்டிப்பாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் காரணமாக பேக்கரிகளின் மின் கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் மீண்டும் அந்தக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உரிமையாளர்களால் அதனை எந்த விதத்திலும் சுமக்க முடியாது என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பேக்கரி கைத்தொழிலுக்கு தேவையான கோதுமை மா, முட்டை மற்றும் ஏனைய மூலப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
அத்துடன் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழிற்துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் கண்டிப்பாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்க நேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment