கண்காணிப்பு பணிகளுக்கு நான்கு அமைப்புகளுக்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

கண்காணிப்பு பணிகளுக்கு நான்கு அமைப்புகளுக்கு அனுமதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெப்ரல், கபே, சி.எம்.இ.வி, போன்ற அமைப்புக்களுக்கு இம்முறை தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரண்டு கண்காணிப்புக் குழுக்கள் மட்டுமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஏனைய அமைப்புகள் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment