தேர்தல் ஆணைக்குழு 18 மில்லியன் ரூபா நிலுவை : ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை என்கிறார் சாந்த பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

தேர்தல் ஆணைக்குழு 18 மில்லியன் ரூபா நிலுவை : ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை என்கிறார் சாந்த பண்டார

தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல் உள்ளிட்ட வேறு நடவடிக்கைகளின் போது அரசாங்க அச்சகத் திணைக்களம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள சேவைக்காக இந்தப் பணத்தை வழங்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தேவையான நிதியை அந்த திணைக்களம் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இதுபோன்று அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் மூலமும் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தை அளவிடுவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து அரசாங்க அச்சகத் திணைக்களம் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக கோரியுள்ள நிலையில் அந்த நிதியையும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை வழங்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment