டிசம்பரில் வீழ்ச்சியடைந்த பண வீக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

டிசம்பரில் வீழ்ச்சியடைந்த பண வீக்கம்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பண வீக்கம் இவ்வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக டிசம்பரிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய பண வீக்கம் 57.2 சதவீதமாகவும், உணவு பண வீக்கம் 64.4 சதவீதமாகவும், உணவல்லாப் பண வீக்கம் 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பரில் 61 சத வீதமாக காணப்பட்ட பண வீக்கம், டிசம்பரில் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு பண வீக்கம் 4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, உணவுப் பண வீக்கம் 9.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பரில் 73.7 சத வீதமாக காணப்பட்ட உணவு பண வீக்கம், டிசம்பரில் 64.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை நவம்பரில் 54.5 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பண வீக்கம், டிசம்பரில் 53.4 சத வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 0.36 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சி இதற்கு பிரதானமாக பங்களித்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆண்டு சராசரி பண வீக்கம் 2022 நவம்பரில் 42.6 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 46.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதாரத்தின் அடிப்படை பண வீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பண வீக்கம் 2022 நவம்பரில் 49.4 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 47.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இதே போன்று ஆண்டு சராசரி மையப் பண வீக்கம் நவம்பரில் 31.4 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 34.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment