வாக்குச்சீட்டின் அளவுக்கேற்ப செலவு தீர்மானிக்கப்படும் : எதிர்வரும் வாரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வர்த்தமானி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

வாக்குச்சீட்டின் அளவுக்கேற்ப செலவு தீர்மானிக்கப்படும் : எதிர்வரும் வாரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வர்த்தமானி

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் செலவு, வாக்குச்சீட்டின் அளவுக்கேற்ப தீர்மானிக்கப்படுமென அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் கணிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்தத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலான வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதுடன் ஏனைய அனைத்துத் தேர்தல்களுக்கும் வாக்குச் சீட்டுக்களின் அளவு கூடுதல் குறைதல் வித்தியாசப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடுதல் தொடர்பில் எடுக்கப்படும் காலம் கவனத்திற்கொள்ளப்பட்டு அதற்கான செலவுகள் திருத்தம் செய்யப்படும் என்றும் வாக்குச்சீட்டு அச்சிடும் காலம் தேர்தல் திகதியோடு ஒப்பிடுகையில் குறைவான காலம் எனில் செலவுகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் முன்னோடி நடவடிக்கைகள் அச்சக திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வர்த்தமானி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் திணைக்களத்திற்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment