விவசாயிகளுக்கு 36 ஆயிரம் தொன் உரம் நன்கொடை : கமநல சேவை நிலையத்திற்குச் சென்று உறுதி செய்யவும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

விவசாயிகளுக்கு 36 ஆயிரம் தொன் உரம் நன்கொடை : கமநல சேவை நிலையத்திற்குச் சென்று உறுதி செய்யவும்

(எம்.மனோசித்ரா)

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத் தாபனத்தின் ஊடாக 2023 இல் அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36000 தொன் டிரிபிள் சுப்பர் பொஸ்பேற்று உரம் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட உரத்தின் அளவு ஜனவரி 5 ஆந் திகதி வரை அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய தாபனம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் ஆகியவற்றின் நிதியுதவியுடன், இலங்கையில் உள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 தொன் டிரிபிள் சுப்பர் பொஸ்பேற்று உரத்தை விவசாய அமைச்சின் ஊடாக விநியோகிக்கவுள்ளது.

2022/2023 பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் அடிப்படையில் விவசாயி ஒருவருக்கு வழங்கப்படும் உரத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

விவசாயி ஒருவருக்கு ஒதுக்கப்படும் உரத்தின் அளவை நிர்ணயம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து, விநியோகப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து நெல் விவசாயிகளையும் அந்தந்த கமநல சேவை நிலையத்திற்குச் சென்று அவர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுமாறு உலக உணவு மற்றும் விவசாயத் தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

விநியோகப்பட்டியல்கள் 2023 ஜனவரி 5ஆந் திகதி வரை காட்சிப்படுத்தப்படுவதுடன், உர விநியோக திகதி கமநல சேவை நிலையங்கள் மூலம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment