இலங்கை முற்றாக கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை : அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

இலங்கை முற்றாக கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை : அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

இலங்கை முற்றாக கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை என தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அனைவரும் அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

சீனா இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது பாரதூரமான கொவிட் ஆபத்தை தற்போது எதிர்கொள்ளாத போதிலும் நாங்கள் முற்றாக ஆபத்திலிருந்து விடுபடவில்லை பெருந்தொற்று எந்தவேளையிலும் உருவெடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மீற்றர் தூர இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசங்களை அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதே பாதுகாப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் அடையாளம் காணப்படுபவர்களை விட அதிக நோயாளிகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment