எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை தங்களிற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து போதியளவு எரிவாயு கிடைக்கவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் இந்த வாரம் விலை குறைப்பு குறித்து எதிர்பார்ப்பு காரணமாக விநியோகஸ்தர்கள் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றர் போல தோன்றுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் பல வியாபாரிகள் கடந்த இரண்டு வார காலமாக தங்களிற்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
தற்போது எங்களிடம் எந்த கையிருப்பும் இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் விடுத்த வேண்டுகோளை விட குறைவாகவே எங்களிற்கு வழங்கியுள்ளனர் என கொழும்பை சேர்ந்த ஒரு வியாபாரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக 5 கிலோ சிலிண்டர்கள் எங்களிற்கு கிடைக்கவில்லை நேற்று எங்களிற்கு 12.5 சிலிண்டர்கள் கிடைக்கும் என தெரிவித்தனர், ஆனால் நேற்று வரை அது கிடைக்கவில்லை, அது நிச்சயமில்லை எனவும் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 05, கொழும்பு 15, பத்தரமுல்ல ஹோமாஹம பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கடந்த நான்கு ஐந்து நாட்களாக வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கையிருப்பு தீர்ந்து போயுள்ளது போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை மற்றுமொரு வியாபாரி லிட்ரோ நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை கொள்வனவு செய்துள்ள விநியோகஸ்தர்கள் அடுத்த வாரமளவில் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக போதியளவு எரிவாயுவை கொள்வனவு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் அதிக விலைக்கு கொள்வனவு செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற அச்சம் காரணமாக விநியோகஸ்தர்கள் போதுமான அளவு கொள்வனவு செய்கின்றார்கள் இல்லை. நவம்பர் 05 ஆம் திகதி புதிய விலை அறிவிக்கப்பட்டதும் போதுமான கையிருப்பு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரிக்கு செலுத்த வேண்டிய தொகையை லிட்ரோ நிறுவனம் செலுத்திவிட்டதால் நவம்பர் முதல் வாரத்தில் விலைகள் குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment