Laugfs எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

Laugfs எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

12.5kg: ரூ. 4,551 இலிருந்து ரூ. 4,280 ஆக ரூ. 271 இனால் குறைப்பு
5kg: ரூ. ரூ. 1,827 இலிருந்து ரூ. 1,720 ஆக ரூ. 107 இனால் குறைப்பு
2.3kg: ரூ. 848 இலிருந்து ரூ. 800 ஆக ரூ. 48 இனால் குறைப்பு

No comments:

Post a Comment