பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் சூடு : விசாரணை அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் சூடு : விசாரணை அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பிப்பு

(எம்.மனோசித்ரா)

மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற பிரிதொரு மாணவனிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் மாத்தறையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேரடி தலையீட்டுடன் கடந்த வெள்ளிக்கிழமை திஹகொட - நாயிம்பல பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் சனிக்கிழமை சம்பவ இடம் பார்வையிடப்பட்டதோடு, முச்சக்கர வண்டியில் சென்ற ஏனைய மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதன்போது அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடிய அலுவலக அதிகாரிகள், அவர்களிடம் அமைதியாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் முடிவுகள், பொறுத்தமான பரிந்துரைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment