(எம்.வை.எம்.சியாம்)
இரத்மலானை ரயில்வே திணைக்களத்தில் உள்ள சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை ரயில்வே திணைக்களத்தில் உள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்களை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை இரத்மலானை பிரதேசத்தில் 62 கிலோ அலுமினியத்தை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்தி செல்ல முயன்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 21, 35 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இரத்மலானை மற்றும் மொரன்துடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment