கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்

(எம்.எப்.எம்.பஸீர்)

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில், நேற்று (30) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு நகரக் கிளையின் நேரடி மேற்பார்வையில் நடந்த நிர்வாக தெரிவின் போது இவ்வாறு அவர் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், 2014 இல் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை ஆரம்பிக்கும் போது அதன் ஸ்தாபக உறுப்பினராகவும், செயலாளராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ள நிலையிலேயே தற்போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கொழும்பு நகரை மையப்படுத்தி அமையப் பெற்றுள்ள 180 பள்ளிவாசல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சம்மேளனத்தின் கீழ் 12 கிளைகளும் இயங்குகின்றன.

இந்நிலையில் குறித்த சம்மேளனத்தின் செயலராக புதுக்கடை கிளை சம்மேளனத்தை சேர்ந்த அப்துல் கரீமும், பொருளாலராக கொலன்னாவ கிளையைச் சேர்ந்த பெரோஸ் மொஹம்மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment