அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம்

(எம்.வை.எம்.சியாம்)

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக தற்போது சுகாதார துறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இதுவரை காலமும் எமக்கு சிகிச்சை பிரிவுகளில் மருந்து தட்டுப்பாடுகள் மாத்திரமே காணப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு மேலதிகமாக மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் வெளி நோயாளர் பிரிவுகளுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளையேனும் மேற்கொள்ள முடியாமல் வைத்தியசாலைகள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளன.

மேலும் முக்கியமான வைத்தியசாலைகளிலும் அதுவும் கொழும்பை அண்மித்த வைத்தியசாலைகளில் செலைன்யின் பெறுவதற்கு கூட முடியாததொரு மோசமான நிலை காணப்படுகிறது. இரத்த மாதிரி பரிசோதனைகளுக்கு தேவையான சில உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

அநூரதபுரம் வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்வதிலும் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. அதன் மூலம் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஈ.சி.ஜி பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

அன்று நாம் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் உரையாடினோம். உண்மையில் மருந்து தட்டுப்பாடு மேலதிகமாக தற்போது மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே இது தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்று எமக்கு தெரியவில்லை என்றார்.

No comments:

Post a Comment